“அடுத்த மேட்சுக்கு டீம் ரெடி!!”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம்!! முக்கிய வீரர்கள் ‘வெளியே’!.. பிசிசிஐ எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா போகும் இந்திய அணியில் 7 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள், டெஸ்ட், டி 20 தொடர் நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் இளம் வீரர்கள் சிலர் ஐபிஎல் மூலம் வாய்ப்பு பெற்றுள்ள, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இன்று 7 முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளது.
அதன்படி விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடுவார். அனுஷ்கா சர்மாவிற்கும் கோலிக்கும் ஜனவரியில் குழந்தை பிறக்க உள்ளதால் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் கோலி இந்தியா திரும்பி விடுவார். இதேபோல் இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டி 20 அணிகளில் ரோஹித் ஆட மாட்டார். ஆனால் அவர் டெஸ்ட் தொடரில் ஆடுவார். கோலிக்கு மாற்றாக அணியில் ரோஹித் இடம்பெறுவார்.
இந்திய அணியின் ஒருநாள் தொடரில் சஇந்திய அணியில் விக்கெட் கீப்பராக உள்ள கே.எல்.ராகுலுக்கு பதில் சஞ்சு சாம்சன் கூடுதல் விக்கெட் கீப்பராக இணைந்துள்ளார். இஷாந்த் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் ஆடுவார், வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் ஆடுவார். இதேபோல் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியில் சாஹா இடம்பெறுவது சந்தேகம் ஆகியுள்ளது. ஆனால் காயங்கள் இல்லை எனினும், இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி இந்திய அணியில் இடம்பெறவில்லை.

மற்ற செய்திகள்
