"இதுனால தான் உங்கள 'கல்யாணம்' பண்ணேன்.." 'பும்ரா' - 'சஞ்சனா'வின் 'க்யூட்' உரையாடல்!.. வைரலாகும் 'கமெண்ட்ஸ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிவடைந்த நிலையில், இதன் மூன்று தொடரையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருந்த போது, தொடரின் பாதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விலகியிருந்தார். தனது திருமணத்திற்காக தான் பாதியில் பும்ரா விடுப்பு எடுத்துக் கொண்டார் என தகவல் பரவிய நிலையில், விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணம் தொடர்பான புகைபபடங்களை பும்ரா பகிர்ந்த பிறகு தான், அவர்களின் காதல் வாழ்க்கை குறித்த தகவல் வெளியே தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த அழகிய ஜோடிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பும்ரா - சஞ்சனா கணேசன் ஆகியோர் இன்ஸ்டாவில் மாறி மாறி செய்து கொண்ட கமெண்ட் ஒன்று, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
பழைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சஞ்சனா கணேசன், 'வாழ்நாள் முழுவதும் மதிப்புள்ள நினைவுகள்' என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, தனது மனைவியின் பதிவில் கமெண்ட் செய்த பும்ரா, 'இந்த புகைப்படத்தை எடுத்தவர் நல்லவர்' என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் கமெண்ட் செய்த சஞ்சனா கணேசன், 'இதனால் தான் அவரை நான் திருமணம் செய்தேன்' என குறிப்பிட்டுள்ளார்.
அழகிய காதல் ஜோடியின் இந்த இன்ஸ்டா உரையாடல், நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து தொடரின் பாதியில் இருந்து விலகிய பும்ரா, அடுத்ததாக ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
