'மனைவி'யின் பிறந்தநாளுக்கு.. காதலில் உருகி 'வாழ்த்து' சொன்ன 'பும்ரா'.. "ப்பா, மனுஷன் எப்படி எல்லாம் ஃபீல் பண்ணி சொல்றாரு பாருங்க?!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah), கிரிக்கெட் போட்டி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை (Sanjana Ganesan) கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரின் போது, பாதியில் பும்ரா விலகிய நிலையில், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பும்ரா யாரைத் திருமணம் செய்யப் போகிறார்கள் என்பது பற்றியும், பல வதந்திகள் பரவின. இவை அனைத்திற்கும், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சஞ்சனா கணேசனுடன் தனக்கு நடந்த திருமணத்தின் புகைப்படங்களை, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார் பும்ரா.
இருவரும் காதலித்து வந்த நிலையில், அதனை ரகசியமாக வைத்தே, திருமணம் வரை வெளியே தெரிவிக்காமல் இருந்துள்ளனர், பும்ராவும் சஞ்சனா கணேசனும். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு, இன்று தனது பிறந்தநாளை சஞ்சனா கணேசன் கொண்டாடவுள்ளதையடுத்து, காதல் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றை பும்ரா தெரிவித்துள்ளார்.
சஞ்சனா கணேசனுடன், தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த பும்ரா, 'எனது இதயத்தை தினமும் திருடும் நபருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எனக்கானவள், நான் உன்னை நேசிக்கிறேன்' என காதலில் உருகி, தனது வாழ்த்தை, அன்பு மனைவிக்காக குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday to the person who steals my heart everyday. You’re my person, I love you. ❤ pic.twitter.com/4QuIPUL1kX
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) May 6, 2021
இந்த பதிவு, நெட்டிசன்கள் மத்தியில், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
