ப்ராக்டீஸ் பண்ணும் போது இடுப்புல காயம்.. அவர் விளையாடுறது சந்தேகம் தான்.. டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இதில் மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து வரும் ஏப்ரல் 2-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில் டெல்லி அணியின் நட்சத்திர வீரரான ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் பயிற்சியில் ஈடுபட்டபோது மிட்செல் மார்ஷிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கு பெற மாட்டார் என சொல்லப்படுகிறது.
30 வயதான மிட்செல் மார்ஷ் 6 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிவிட்டு கணுக்கால் காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் வெளியேறினார். இதனை அடுத்து இந்த ஆண்டும் அவர் காயம் காரணமாக வெளியேற உள்ளதாக தகவல் வெளியானது டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
