‘ஆஸ்திரேலியாவால் முடியாத ஒன்னை இந்தியா கையில் எடுத்திருக்காங்க’.. இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.. பாகிஸ்தான் முன்னாள் ‘கேப்டன்’ புகழாரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக கிரிக்கெட் அரங்கில் எந்த கிரிக்கெட் அணியும் முயற்சி செய்யாத ஒன்றை இந்திய அணி செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. மேலும் இந்த அணியே அடுத்து நடைபெற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். மேலும் இதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யாவை தவிர மற்ற அனைவரும் இளம்வீரர்களாக இடம்பெற உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு அணிகளாக பிரிந்து இந்தியா வெவ்வேறு தொடர்களில் விளையாட உள்ளதை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக் புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், ‘வலுவாக ஒரு அணி இருக்கும்போது, அதே பலத்துடன் கூடிய மற்றொரு அணியை உருவாக்கி வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் அற்புதமாக உள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் இதுபோல் செய்வது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன்.
முன்னணி அணியாக ஆஸ்திரேலியா இருந்தபோது, 1995 மற்றும் 2005-2010ம் ஆண்டு வாக்கில் இந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணி இதை வெற்றிகரமாக கையாளும் என நினைக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது, இரண்டுமே தேசிய அணிகள் என்பது சிறப்பான விஷயம்’ என இன்சமாம்-உல்-ஹாக் புகழ்ந்து பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
