எப்படி விளையாடணும்?.. என்ன ரூல்ஸ்?.. எதுவுமே தெரியாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை.. கேலி கூத்தாக்கும் ஐசிசி!.. கடும் விமர்சனம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான விளையாட்டு விதிமுறைகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என பிசிசிஐ காத்திருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.
இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான playing conditions ஐசிசி இதுவரை வெளியிடாமல் இருந்து வருகிறது. இதனால், இறுதிப் போட்டி ஒருவேளை டிராவில் முடிந்தாலோ, இரண்டாம் இன்னிங்ஸில் டார்கெட் சேஸிங்கில் ஆட்டம் சமனில் முடிந்தாலோ அல்லது போட்டியே நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டாலோ, யார் வெற்றியாளர் என்பது குறித்த தெளிவு இதுவரை பிசிசிஐ-க்கு கூட இல்லை.
இந்த நிலையில், இப்போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி விரைவில் அறிவிக்கும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இது தொடர்பான அறிவிப்பை ஐசிசி விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம். ஆனால், தேதியை உறுதியாக கூற முடியாது என்றார். அப்படி அறிவிக்கும் பட்சத்தில் போட்டிக்கான தெளிவான முடிவுக்கு வர முடியும்.
Playing conditions என்பது ஒவ்வொரு நாளும் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும், போட்டி தடைப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், போட்டி ரத்தானால் என்ன செய்ய வேண்டும், ஓவர்கள் பொறுமையாக வீசினால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகியவற்றில் தொடங்கி, அம்பயர்கள் பயன்படுத்தும் light reading meter வரை அனைத்து விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கும். அதன்படி தான் அம்பயர்கள் செயல்பட முடியும்.
அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளைத் தான் பிசிசிஐ கோருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் தான் இத்தனை அவசரம் காட்டப்படுகிறது. இதுவொரு வழக்கமான டெஸ்ட் தொடர் கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் final என்பதாலும், முதன்முறையாக நடப்பதாலும் தான் இத்தனை குழப்பம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
