‘3 மாத சுற்றுப்பயணம்’!.. 2 விக்கெட் கீப்பர் போதாது, இன்னொருத்தர் வேணும்.. பிசிசிஐ எடுத்த ‘சூப்பர்’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ள. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதில், மொத்தம் 20 வீரர்களுடன் 4 பேக்கப் வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த அணியே அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்தது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் விருத்திமான் சாஹா மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இதில் சாஹாவுக்கு ஐபிஎல் தொடரின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவரை காத்திருப்போர் பட்டியலில் பிசிசிஐ வைத்தது. தற்போது சாஹா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதனால் விரைவில் மும்பையில் உள்ள இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த பிசிசிஐ தேர்வு குழு,‘சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், அவர் இங்கிலாந்து தொடரின்போது சீரான உடல்நிலையில் இருப்பாரா என்பது தெரியாது. விக்கெட் கீப்பங் என்பது மிக முக்கியமான பொறுப்பு. மூன்று மாதங்கள் விளையாட உள்ள பெரிய சுற்றுப்பயணத்தில், எங்களுக்கு இன்னொரு விக்கெட் கீப்பர் நிச்சயம் தேவை. அதனால்தான் கே.எஸ்.பரத்தை அணியில் சேர்த்துள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் இடம்பிடித்திருக்கும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத், முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 போட்டிகளில் விளையாடி 4823 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 270 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். இதற்கு முன்பும் சில தொடர்களில் இந்திய அணிக்கான பேக்கப் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.