அஷ்வின் வீசிய பந்து .. அடித்து பறக்கவிட்ட அமைச்சர் உதயநிதி: சென்னை மாணவர்களுக்காக முன்னெடுக்கும் அசத்தல் திட்டம்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டில் ஊக்கம் அளிக்கும் விதமாக கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி கூட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்யுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் , அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு எனது நன்றிகள். அவர் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறியிருக்காது. பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என அவர் தான் முதலில் குறிப்பிட்டார். அதனால் அவருக்கு நன்றி.” என பேசினார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அஸ்வின் தற்போது ஐபிஎஸ் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். அவர் விக்கெட் எடுத்தாலும் கைதட்டுவோம். நன்றாக ஆடும் வீரர்கள் யாராக இருந்தாலும் தமிழக மக்கள் பாராட்டுவார்கள். அவருக்கு ஐபிஎல் போட்டி இருந்தும் நேரம் ஒதுக்கி விழாவுக்கு வந்ததற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி அளிக்க வருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்” என உதயநிதி பேசினார்.
மேலும், பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்து கலைஞரின் 100வது பிறந்தநாளையொட்டி, தமிழக ஊராட்சி கிரிக்கெட் அணிகளுக்கு 42 கோடி ரூபாய் செலவில் கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
