"தெரியாம சச்சின அவுட் எடுத்துட்டேன்.." மைதானத்திலேயே அக்தருக்கு நடந்த சம்பவம்.. "உங்கள யாரு இது எல்லாம் பண்ண சொன்னா?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எப்பவும் ஆன்லைன் கேம்.. கடைசி'ல இளைஞருக்கு நேர்ந்த நிலை.. பதைபதைப்பு சம்பவம்
ஒவ்வொரு தொடரும் மிகவும் விறுவிறுப்பாக சென்றதால், இன்று 15 ஆவது சீசன் வரை, ஐபிஎல் போட்டிகள் மிகவும் வெற்றி நடையுடன் அரங்கேறி வருகிறது.
முன்னதாக, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது, சச்சின், சேவாக், டிராவிட், லட்சுமண், சோயிப் அக்தர், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா என ஒட்டுமொத்த கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஐபிஎல் போட்டிகளில் பங்கு எடுத்திருந்தனர்.
சச்சினை அவுட் எடுத்த அக்தர்
அப்போது ஒவ்வொரு போட்டிகளிலும், மைதானத்தில் சூழ்ந்திருந்த ரசிகர்கள், தங்களின் பேவரைட் வீரர்களுக்கு ஆக்ரோஷத்துடன் வரவேற்பினை அளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சச்சினை அவுட் எடுத்த காரணத்தினால் தனக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் செயல்பட்டு வந்தார். இன்னொரு பக்கம், கொல்கத்தா அணியில் அக்தர் இடம்பெற்றிருந்தார். மேலும், இந்த அணியின் கேப்டனாக தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செயல்பட்டு வந்தார். அப்போது ஒரு போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள், மும்பை வான்கடே மைதானத்தில் மோதி இருந்தன. மும்பை அணி பேட்டிங் செய்த போது முதல் ஓவரிலேயே சச்சினை அக்தர் அவுட்டாக்கி விட்டார்.
சச்சின யார் அவுட் எடுக்க சொன்னா?
இதுகுறித்து பேசிய அக்தர், "அந்த போட்டியின் போது, வான்கடே மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். அப்போது, முதல் ஓவரிலேயே நான் சச்சினை அவுட் ஆக்கியது, பெரிய தவறாக போய் விட்டது. ஃபைன் லெக் திசையில் நின்ற என்னை ரசிகர்கள் வசைபாட தொடங்கினர். என்னிடம் வந்த சவுரவ் கங்குலி, 'மிட் விக்கெட் பகுதியில் ஃபீல்டிங் நில்லுங்கள். இல்லையெனில் இவர்கள் உங்களை தீர்த்து விடுவார்கள். மும்பையில் வைத்து சச்சினை அவுட் எடுக்க உங்களிடம் யார் சொன்னது?' என என்னிடம் கேட்டார்" என அக்தர் குறிப்பிட்டார்,
தொடர்ந்து, மும்பை வான்கடே மைதானம் பற்றி பேசிய அக்தர், "நான் மும்பை மைதனக்த்தில் ஆடிய போது, யாரும் எனது நாட்டை குறித்தோ, இனவாத ரீதியிலான கருத்தையோ என்னை நோக்கி வெளிப்படுத்தவில்லை என்பதால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். வான்கடேவில் உள்ள ரசிகர்கள் உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டனர். நான் அங்கு நிறைய போட்டிகளை ஆட வேண்டும் என விரும்பினேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.