IPL2022: ”இன்னைக்கு சில தெரிஞ்ச முகங்களோட மோத வேண்டி இருக்கு”…. RCB அணி பகிர்ந்த நாஸ்டால்ஜியா PHOTOS !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஆற்றின் கரை அருகே 'Wedding' போட்டோஷூட்??.. எதிர்பாராத நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்
கோலியின் அதிர்ச்சி முடிவு…
2014 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்திய கோலி கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வழிநடத்திய போதும் அவரால் ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது.
RCB அணிக்கு ஏற்பட்ட இழப்பு…
ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவரும் முன்னாள் கேப்டன் கோலியின் நெருங்கிய நண்பருமான டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி-க்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வந்த டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பு அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனால் இப்போது அவரை அணி நிர்வாகம் அணியில் ஆலோசகராக நியமித்துள்ளது.
புதுக்கேப்டன் தலைமையில்…
கோலியின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியுள்ளார். அதுபோலவே ஐபிஎல் தொடரில் நான்கு முறைக் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார். 37 வயதாகும் டு பிளஸ்சிதான் இந்த ஆண்டு அதிக வயதுமிக்க கேப்டனாக உள்ளார்.
இன்றைய போட்டி…
இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள RCB ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவது போட்டியாக இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடிய சஹால், நவ்தீப் சைனி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இதைக் குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் RCB அணி ‘இன்றைய போட்டியில் சில தெரிந்த முகங்களோடு மோத வேண்டியுள்ளது’ எனக் கூறி அவர்கள் RCB மற்றும் RR உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகின்றன.
'போன்-அ செக் பண்ணனும்னு போலீஸ் கேட்டா.. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க'..அதிரவிட்ட கமிஷ்னர்..!