"எப்பவும் உங்கள காப்பாத்த ஆளு இருக்க மாட்டாங்க.. 'குத்தம்' சொல்றத விட்டுட்டு 'முதல்'ல வளருங்க 'தம்பி'.." கடுப்பாகி கொந்தளித்த 'அக்தர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்த முகமது அமீர் (Mohammad Amir), தனது 29 ஆவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், அமீர் ஆடிய சமயத்தில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தர் பயிற்சியாளராக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மிஸ்பா மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர், தனக்கு விளையாட அதிகம் வாய்ப்புகளை தர மறுத்ததாகவும், தன்னை ஓரம் கட்டியதன் மூலமாக, மனரீதியிலான பிரச்சனைகளை தான் சந்தித்ததாகவும், இதனால் தான் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அமீர் குறிப்பிட்டிருந்தார். சொந்த அணியின் நிர்வாகம் மீது அமீர் வைத்த விமர்சனம், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் (Shoaib Akhtar), அமீரின் முடிவு குறித்து சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 'சில சமயங்களில் உங்களது நேரம் சிறந்ததாக இருக்கலாம். சில சமயம், கெட்ட நேரங்களும் இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் உங்களைக் காப்பாற்ற, மிக்கி ஆர்தர் வரமாட்டார். எப்போதும், அணி நிர்வாகத்தினை நாம் குற்றம் கூறாமல், நீங்களாக ஆடி உங்களது திறமையை நிரூபிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, ஹபீஷையும் ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் புறக்கணித்தது உண்மை தான். ஆனால், அணி நிர்வாகத்தினை அவர் குற்றம் கூறாமல், தனது ஆட்டத்தை மேம்படுத்தினார். இதனால், ஹபீஸிடம் இருந்து, உங்களது விளையாட்டை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்' என அமீரை அக்தர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
