'படகுல ஏறி எஸ்கேப் ஆக பார்த்தார்...' 'மடக்கி பிடித்த லோக்கல் போலீஸ்...' 'ரூ.13,500 கோடி மோசடி செய்த விவகாரம்...' - பரபரப்பு பின்னணி...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆன்டிகுவா நாட்டில் இருந்து தப்பிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஸி கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவுக்கு குடும்பத்துடன் தப்பினார்.
அந்த நாட்டின் குடியுரிமையையும் (citizenship) அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் மெகுல் சோக்ஸி அங்கிருந்து வேறொரு நாட்டிற்கு தப்பித்து சென்றதாக சொல்லப்படுகிறது. இது குறித்து இரு நாட்களுக்கு முன்பாக ஆன்டிகுவா போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தப்பி ஓடிய மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது படகு மூலம் கியூபாவுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிகா நாட்டில் அவரை உள்ளூர் போலீசார் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது டொமினிகா போலீசார் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகுல் சோக்ஸியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், மற்றொரு முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியை, விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வர இந்தியாவின் முயற்சி தொடர்பான, முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 16ம் தேதி அன்று நிரவ் மோடியை, விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு திருப்பி அழைத்து வர, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்ற நிரவ் மோடி (Nirav Modi), அங்கிருந்து இந்தியா திரும்பிவில்லை. கடந்த மார்ச் மாதம் லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர்.