“அப்படி சொன்னது நான் இல்லை.. மஹி பாய் மீது அதிகம் மதிப்பு வைத்திருக்கிறேன்” - அந்தர் பல்டி அடித்த பிரபல வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 15, 2019 05:49 PM

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி போட்டிகளுக்கு இடையில் அவ்வப்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டை வீழ்த்துவது என  டிப்ஸ்கள் கொடுப்பது வழக்கம்.

kuldeep yadav clarifies his controversial comment on dhoni

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம், தோனி கொடுக்கும் டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருந்ததா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படி தோனி கொடுக்கும் டிப்ஸ்கள் பல நேரங்களில் தவறாக இருக்கும். ஆனால் அது பற்றி அவரிடம் கேட்கவும் முடியாது” என நகைச்சுவையாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்டனத்துக்கும் உள்ளானது.

இந்நிலையில் அதை மறுத்துள்ள குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நமது ஊடகங்கள் இதுபோன்ற வதந்திகளை மிகவும் விரும்புகிறது. புதிதாக ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை உருவாக்கியுள்ளது. அதன்மீது அதிக கவனம் செலுத்தி அதை சிலர் வேகமாகப் பரப்பி வருகின்றனர். அந்த செய்தி முற்றிலும் பொய்யானது. நான் அதுபோல யாரைப் பற்றியும் முறையற்ற எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மஹி பாய் மீது நான் அதிகம் மதிப்பு வைத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags : #DHONI #MAHIBAI #KULDEEP