காண்டாக்ட் லென்ஸோடு தூங்கிய இளைஞர்.. கண் விழித்த போது ஏற்பட்ட விபரீதம்.. அதிர்ந்த மருத்துவ உலகம்!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் மைக் க்ரம்ஹோல்ஸ்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிரபாஸ் - KGF பிரஷாந்த் நீல் இணையும் 'சலார்'.. செம அப்டேட் கொடுத்த ஸ்ருதிஹாசன்..!
21 வயதான இவர், கான்டாக்ட் லென்ஸ்களை கண்ணில் வைத்துக்கொண்டு 40 நிமிடங்கள் தூங்கியதால், ஒரு கண்ணில் பார்வை பறிபோனது என கூறியுள்ளார்.
தூக்கத்திலிருந்து எழுந்தபோது, அவர் கண் மோசமான ஒவ்வாமையால் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் கண் மருத்துவரைச் சந்தித்த பிறகு, ஐந்து வெவ்வேறு கண் மருத்துவர்கள் மற்றும் இரண்டு கார்னியா நிபுணர்களின் சோதனைக்கு பிறகு, அவரது கண்ணில் மிகவும் அரிதான ஒட்டுண்ணி இருப்பது கண்டறியப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
அது அகந்தமோபா கெராடிடிஸ் என்ற ஒருவகை ஒட்டுண்ணி ஆகும். மனிதனின் சதைகளை சிதைத்துண்ணும் இவ்வகை ஒட்டுண்ணிகள் அரிதானவை. பின்னர் அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்ட கண்ணில் செய்யப்பட்டன.
பிடிடி கான்ஜூன்டிவல் ஃபிளாப்பின் டிரான்ஸ்பார்ம் மற்றும் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவருக்கு பாதிக்கப்பட்ட கண்ணில் முற்றிலும் பார்வை இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய டிக் டாக் பதிவில் "நான் இந்த கடினமான நேரத்தை கடக்க முயற்சிக்கிறேன். ஆனால் எனக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. நான் தற்போது அனுபவிக்கும் இந்த பயங்கரமான அனுபவத்தை யாரும் அனுபவிக்கக்கூடாது”. என கூறியுள்ளார். மேலும், "காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்திருக்கும் போது க்ஷ தூங்கவோ, நீந்தவோ, குளிக்கவோ வேண்டாம்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
தூங்கும் போது அணியும் காண்டாக்ட் லென்ஸ்கள் கண்ணை அடையக்கூடிய ஆக்ஸிஜனின் அளவைக் குறைத்து நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கான்டாக்ட் லென்ஸ், உறங்கும் போது பாக்டீரியா அல்லது நுண்ணுயிர் தொற்றைத் தடுக்கத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்தைப் பெறுவதிலிருந்து உங்கள் கண்ணைத் தடுக்கிறது என்றும் மருத்துவர்கள் இது குறித்து கூறுகின்றனர்.
காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தால் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இங்கே தரப்படுகிறது.
உங்கள் லென்ஸ்களைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் தினமும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.
Images are subject to © copyright to their respective owners.
ஒவ்வொரு முறையும் லென்ஸ்களை மீண்டும் அதற்குரிய இடத்தில் வைக்கும் போது உங்கள் லென்ஸ் பெட்டியில் மீதமுள்ள கரைசலை பயன்படுத்த வேண்டாம்.
கண்களில் ஏதேனும் எரிச்சல் அல்லது வலி அல்லது கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை உணர்ந்தவுடன் லென்ஸ்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
லென்ஸ்களை அணிந்து கொண்டு வெளியே செல்லும் போது எப்போதும் காண்டாக்ட் லென்ஸ் பெட்டி மற்றும் உதிரி கண்ணாடிகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
கண்களில் சிறிதளவு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.