'சென்னையில் சமூக பரவலா'?.... 'என்ன நிலையில் இருக்கிறது'?... சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறிவிட்டதா என்ற கருத்துக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதாக என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி கூற வேண்டும். கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாகத் தான் உள்ளது. சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். எஞ்சிய 35 சதவீதம் பேரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை.
இதனிடையே சென்னை மாநகராட்சியில் 4, 5, 6 ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. போதிய விழிப்புணர்வு, முகக்கவசம் வழங்கப்பட்டதால் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் தொற்று குறைந்துள்ளது எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
