கொரோனாவுக்கு எதிரா 'தரமா' வேலை செய்யுது... 90% மருந்தை 'வாங்கி' குவித்த அமெரிக்கா... 'கடுப்பான' உலக நாடுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்3 மாதத்துக்கு தேவையான மருந்தை முன்கூட்டியே அமெரிக்கா வாங்கி குவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், வேறு சில நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் சில நல்ல பலனை அளித்து வருகின்றன. அதில் ஒன்று ரெம்டெசிவிர். இந்த மருந்து நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாள்களை குறைப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மருந்துக்கு தற்போது கடும் கிராக்கி நிலவுகிறது.
இந்த நிலையில் ரெம்டெசிவிர் தயாரிக்கும் Gilead's நிறுவனத்திடமிருந்து ரெம்டெசிவிர் மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என 3 மாதங்களுக்கு அந்நிறுவம் தயாரிக்கும் 90% மருந்தை தாங்கள் வாங்கிக்கொள்வதாக அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் மற்ற நாடுகளில் இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடுகள் நிலவும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதனால் வரும் நாட்களில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டறியப்பட்டாலும் கூட அவற்றை அமெரிக்காவே அபகரித்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.