'சமூகம் பெரிய இடம் போல'... 'தலை சுற்றவைக்கும் மாஸ்க்கின் விலை'... வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக நாடுகள் பலவும் கொரோனா அச்சத்தின் காரணமாகப் பல பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் மிக முக்கியமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்காக, அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியில் வரும் மக்கள் அனைவரும் தற்போது மாஸ்க் அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். இதனால் மாஸ்க் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது பல விதங்களில் மாஸ்க் விற்பனை செய்யப்படுகிறது. அவரவர் தங்களுக்குப் பிடித்த விதத்தில் மாஸ்க்குகளை வாங்கி அணிவித்துக் கொள்கிறார்கள். இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட் என்பவர் தங்கத்தினால் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார். அதன் விலையைக் கேட்டால் தான் தலையற்ற வைக்கிறது.
ரூ.2.89 லட்சம் மதிப்புள்ள இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் சுவாசிப்பதில் அவருக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் சங்கர்.
சங்கர், தங்க மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்ன தான் காசு இருந்தாலும் இப்படியா, என நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
