darbar USA others

வால்மார்ட்டின் அதிரடி வேலை நீக்கத்தால்... அதிர்ச்சியடைந்த இந்திய ஊழியர்கள்... இந்தியாவில் மூடப்படுகிறது வால்மார்ட்?...

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Sangeetha | Jan 13, 2020 05:00 PM

அமெரிக்காவின் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் முக்கிய நிர்வாகிகளை பணியை விட்டு நீக்கியுள்ளது.

Walmart lays off 56 senior and mid-level employees in india

அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் வால்மார்ட்டிற்கு, ஹைபர்மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என உலகம் முழுதும் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்நிறுவனத்துக்கு இங்கு 28 கடைகள் உள்ளன. இங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்தியாவில் எதிர்ப்பை சந்தித்து வந்த வால்மார்ட் நிறுவனம், மளிகை, வியாபாரம் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளிலிருந்து உள்ளூர் வர்த்தகங்களை பாதுகாக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட விதிகளால் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்நிலையில், இந்தியாவில் அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து, மூத்த அதிகாரிகளான துணைத் தலைவர்கள் முதல் நடுத்தர ஊழியர்கள் வரை 56 பேரை ஒரேடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளது. 

தொழில் சீரமைப்புப் பணியில் துரிதமாக இறங்கியதை அடுத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செலவைக் குறைக்கும் வகையில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, அதன் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வால்மார்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து வெளியேறப் போவதாக தகவல் வெளியான நிலையில், அதனை வால்மார்ட் நிறுவனம் மறுத்துள்ளது. நஷ்டம் காரணமாக, இந்தியாவில் புதிய கடைகளைத் திறக்கும் நடவடிக்கையை வால்மார்ட் நிறுவனம் நிறுத்தி வைத்துவிட்டு, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : #WALMART #BUSINESS #EMPLOYEES