அது திரும்ப வந்திடுச்சு.. அடுத்தடுத்து 4 மரணங்கள்.. பேய் பயத்துல மொத்த கிராமமும் செஞ்ச வினோத காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீய ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக கூறி மொத்த கிராமமும் சேர்ந்து லாக்டவுனில் இருக்கப்போவதாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தீய ஆவி
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சருபுஜ்ஜிலி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை தாங்களாகவே லாக்டவுனில் இருக்கப்போவதாக அறிவித்துக் கொண்டனர். இதற்கு அவர்கள் சொல்லிய காரணம் தான் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. அந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பீதியடைந்த கிராம மக்கள் உடனடியாக மந்திரவாதி ஒருவரை நாடியுள்ளனர். அவர் கிராமத்தை தீய ஆவிகள் சூழ்ந்து உள்ளதாகவும் மக்கள் அனைவரும் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
முள்வேலி
இதனை அடுத்து கிராமத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் முள்வேலி அமைத்து யாரும் கிராமத்திற்குள் வரவிடாமல் செய்திருக்கின்றனர் கிராம மக்கள். அதுமட்டுமல்லாமல் கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அரசு பள்ளிக்கும் ஒரு வாரம் லாக்டவுனை அறிவித்துள்ளனர். பேய் மீதான பயம் காரணமாக ஒரு கிராமமே லாக்டவுனில் இருப்பதை அறிந்த ஸ்ரீகாகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா, போலீசாருடன் இந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மக்களிடம் இது மூடநம்பிக்கை எனவும் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தி லாக்டவுனை நீக்கியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள். இது குறித்து பேசிய ராதிகா "நாங்கள் எந்தச் சடங்குக்கும் எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில் பிறரை உள்ளே விட மாட்டோம் என்று கிராம மக்கள் தடுப்பது முறையல்ல" என்றார்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் பேசுகையில் "எங்களது முன்னோர்கள் காலத்திலிருந்தே இதுபோன்ற சம்பவங்களை பார்த்துள்ளோம். இத்தகைய சம்பவங்களை உரிய சடங்குகள் மூலம் நாங்கள் சரி செய்து இருக்கிறோம். எங்களுடைய நன்மைக்காகவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் எப்படி இருந்தோமோ அதே போலவே இப்போதும் இருக்கிறோம். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை" என்கின்றனர்.
ஆந்திராவில் பேய்க்கு பயந்து முழு கிராமமும் லாக்டவுனில் இருந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8