'யாராவது டிரீட்மென்ட் பாருங்க ப்ளீஸ்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய குடும்பம்'... அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர் அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் இருக்கும் ராமநகரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மஞ்சுநாத். அரசு மருத்துவராக பணியாற்றி வரும் இவர், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் இவர், முழு நேரமாக பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்ட அவரை, மருத்துவரின் குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு அவரின் கொரோனா பரிசோதனை முடிவைக் காண வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அங்கு முடியாத நிலையில் வேறொரு மருத்துவமனைக்கு மருத்துவர் மஞ்சுநாத்தை கொண்டு சென்றுள்ளார்கள். அங்கும் சிகிச்சை அளிக்கமுடியாத நிலையில் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அங்குச் சிகிச்சை அளிக்கப்படாததால், இறுதியாகப் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். உடனடியாக அவர் வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே அவரது குடும்பத்தினர் பலர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்துள்ளார்கள். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்த மருத்துவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா முடிவுகளை வெளியிட மருத்துவமனைகள் தாமதப்படுத்துவதால் சிகிச்சை அளிக்கமுடியாமல் இதுபோன்ற இறப்புகள் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
