'7 வயசு குழந்தைன்னும் பார்க்கல...' 'சிறுவர்களுக்கு கொடுத்த செக்ஸுவல் டார்ச்சர்... ' - ஆசிரமத்தில் நடந்த மகா கொடுமை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் முசாஃபர்நகரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் முசாஃபர்நகரில் இயங்கும் கோடியா மடம் என்னும் அஸ்திரமத்தை நடத்தி வருகிறார் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் குழந்தைகள் நல வாரிய ஹெல்ப்லைன் மூலம் கோடியா மடத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடந்த செவ்வாயக்கிழமை அன்று போனில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் புகாரின் பெயரில் கோடியா மத் ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர், மேலும் அவர்கள் 7 முதல் 16 வயதுடைய குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.
திரிபுரா, மிசோரம் மற்றும் அசாம் போன்ற பகுதிகளில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதாக கூறி ஆசிரமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் சிறுவர்களை விலங்குகளை பராமரிக்கவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியும், அடித்து துன்புறுத்தியும் உள்ளார் கோடியா மத் ஆசிரமத்தின் உரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ்.
இதன் காரணமாக சுவாமி பக்தி பூஷன் மகாராஜை மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மருத்துவப் பரிசோதனையில் 4 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது