'இந்தியாவிலிருந்து... இங்கிலாந்து 'பிரதமருக்கு' பறந்த 'SUICIDE' மெயில்..,, அடுத்த '2' மணி நேரத்துல டெல்லி போலீஸ் செஞ்ச தரமான 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Aug 29, 2020 03:15 PM

டெல்லியை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

UK PM alerts ministry police delhi woman suicide email saves life

அந்த மெயிலில், 'நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன். இன்னும் இரண்டு மணி நேரத்தில் யாரும் எனக்கு உதவி செய்யவில்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என அதில் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து பிரதமர் அலுவலகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக இது தொடர்பாக இங்கிலாந்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு, அதன்மூலம் இந்திய வெளியுறவுத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி போலீசார் அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த பெண், அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து, அவரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு அந்த பெண்ணின் முகவரியை போலீசார் தேடியுள்ளனர்.

2 மணி நேரத்தில் அந்த பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் டெல்லி போலீசார் தங்கள் முன்னிருந்த சவாலை திறம்பட எதிர்கொண்டனர். டெல்லி, ரோகினி பகுதியில் செக்டர் 21 என்பதை மட்டுமே போலீசார் கண்டுபிடித்த நிலையில், அப்பகுதியிலுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகளை தட்டி சோதனை செய்தனர். இறுதியில், ஒரு வீட்டின் கதவை தட்டிய போது, கதவை திறக்க மறுத்த பெண் ஒருவர், தயவு செய்து சென்று விடுங்கள் எனக்கூறி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு படையினரை அங்கு வரச்செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அந்த பெண், சுமார் 15 பூனைகளுடன் தனியாக இருந்துள்ளார். பெண் போலீசார் உதவியுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு விவாகரத்து ஆனதாகவும், அதிலிருந்தே அவர் தனியாக வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லியின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அவர் ராஜினாமா செய்துள்ளார். அதன் பின்னர், பூனை தான் உலகம் என வாழ்ந்து வந்துள்ளார். அத்துடன் அவருக்கு சிறிய அளவில் மனநலம் பாதிப்புள்ளதும் தெரிய வந்துள்ளது.

டெல்லி, ரோஹிணி பகுதியில் செக்டார் 21 என்பதை மட்டுமே கண்டுபிடித்த போலீஸார் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று சுமார் 50 வீடுகளின் கதவைத் தட்டி சோதனை செய்துள்ளனர். இறுதியாக ஒரு வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியபோது, உள்ளே இருந்த பெண் கதவைத் திறக்க மறுத்து போலீஸாருக்கு எதிராகக் கூச்சலிட்டு, `தயவு செய்து சென்றுவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களை வரவழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு 43 வயது நிரம்பிய ஒரு பெண் மட்டும் சுமார் 16 பூனைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

தனக்கு பல கடன்கள் உள்ளது என்றும், அதற்காக தான் உதவி கேட்டு இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, டெல்லி போலீசார் மனநல மருத்துவரை அழைத்து வந்து அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன் பின்னர், அந்த பெண் இயல்பு நிலைக்கு திரும்பியதும் இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய தகவலை போலீசார் சேகரித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UK PM alerts ministry police delhi woman suicide email saves life | India News.