உலகத்துலேயே முதன்முறையா 'இது' கெடச்சிருக்கு...! 'தோண்ட தோண்ட புதையலை போல நெறைய கிடைக்குது...' ஆய்வாளர்கள் தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஷ்யாவின் எரிமலை ஒன்றில் புதியவகை கனிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பூமியின் மேற்பரப்பில் பல்வேறு அரியவகை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பல கனிமவகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும், தோண்ட தோண்ட வரும் புதையலை போல இன்னும் பல வகையான கனிமப்பொருட்கள் தென்படுகிறது.
அந்த வகையில் தற்போது இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படாததும், பெயரிடப்படாததுமான கனிமம் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கனிம வகையானது ரஷ்யாவிலுள்ள Tolbachik எனும் எரிமலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதய கண்டறியப்பட்ட கனிமம் மென்பச்சை வர்ணம் உடைய பளிங்கு போன்று தோற்றமளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கனிமம் கண்டறியப்பட்ட Tolbachik எரிமலையானது முதன் முதலாக 1975–1976 ஆண்டு காலப் பகுதியில் சாம்பலை கக்கியிருந்தது. அதன் பின்னர் இரண்டாவது தடவையாக 2012–2013 காலப் பகுதியில் கக்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த Tolbachik எரிமலையில் மட்டும் சுமார் 130 வரையான கனிமங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுக்கின்றனர்.

மற்ற செய்திகள்
