“அவர் அப்படி சொன்னதும், ராணுவத் தளபதிக்கு கால் நடுங்கி, வேர்த்து கொட்டிருச்சு!”.. “அபிநந்தனை விடுவிச்சதுக்கு காரணம் இதுதான்!” - ‘ஒரு வருஷம் கழிச்சு’ பாகிஸ்தான் எம்.பியின் ‘பரபரப்பு’ பேச்சு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுல்வாமாவில் மத்திய பாதுகாப்பு படையின் அணி வகுப்பு மீது 14 பிப்ரவரி 2019 பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில், 40 இந்திய வீரர்கள் பலியாகினர். பின்னர் 26 பிப்ரவரி 2019 அன்று இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தானைக் கடந்து பாலகோட்டில் இருந்த முகாம்களை அழித்தன.
தொடர்ந்து 2019 பிப்ரவரியில் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று வீழ்த்திய இந்திய விமானப்படை போர் விமானி அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து சித்திரவதை செய்தது. அந்த நேரத்தில் பல்வேறு வகையான செய்திகள் வந்தன. பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனுக்கு முதலுதவி மற்றும் தேநீர் வழங்கியதாக ஒருபுறமும், இன்னொருபுறம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் படையினரால் ஐ.ஏ.எஃப் விமானி கொடூரமாக தாக்கப்பட்டதும் நிகழ்ந்தது.
இந்நிலையில், அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியா வான் தாக்குதலை தொடுக்கும் என எச்சரித்ததாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் அந்நாட்டு பாரளுமன்ற கூட்டத் தொடரில் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த குற்றச்சாட்டில், “அபிநந்தன் பிடிபட்டதுபோது பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு வந்த வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி பிப்ரவரி 27 அன்று இரவு 9 மணிக்கு இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறியதும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கி, அவருக்கு வியர்த்தது. அப்போது அபிநந்தனை போக விடுங்கள் என்று குரேஷி கேட்டுக் கொண்டார். அதனால்தான் அபிநந்தன் வர்த்தமான் வாகா அட்டாரி எல்லை வழியாக 2019ம் ஆண்டு மார்ச் முதல்தேதியில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் (பி.எம்.எல்-என்) தலைவரான அயாஸ் சாதிக் குற்றம் சாட்டியுள்ளார்.