VIDEO: முன்னங்கால்களை உயர்த்தி 'தண்ணீர்' கேட்டு கெஞ்சும் அணில்... 'இதயத்தை' உருகச்செய்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணையத்தில் வெளியாகும் வீடியோக்கள் கல்நெஞ்சம் கொண்டோரையும் சில நேரம் கரைய வைத்து விடும். அந்த வகையில் தாகத்தால் தவித்த அணில் ஒன்று தண்ணீரை சிறுவன் ஒருவனிடம் கேட்டு வாங்கி குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ''தண்ணீர் கேட்கும் அணில்'' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். அதில் தாகத்தால் தவிக்கும் அணில் ஒன்று ரோட்டில் நடந்து செல்லும் சிறுவன் ஒருவனை சுற்றிச்சுற்றி வருகிறது. சிறுவன் கையில் தண்ணீர் பாட்டில் இருப்பதை பார்த்து தான் அணில் இவ்வாறு செய்கிறது.
Squirrel asking for water.... pic.twitter.com/JNldkB0aWU
— Susanta Nanda IFS (@susantananda3) July 16, 2020
ஆனால் சிறுவனுக்கு அது புரியவில்லை. பின்னர் அணில் தண்ணீரை பார்த்து, பார்த்து முன்னங்கால்களை தூக்குவதை பார்த்து அதற்கு தண்ணீர் வேண்டும் என்பது சிறுவனுக்கு புரிய வருகிறது. தொடர்ந்து சிறுவன் பாட்டிலை திறந்து தண்ணீரை கொடுக்க தாகம் தீரும்வரை குடித்து பின்னர் அணில் அந்த இடத்தை விட்டு செல்கிறது. இதயத்தை உருகச்செய்யும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
