'நானும் கோலியும் சின்ன வயசுலயே மோதிக்கிட்டோம்!'.. ரகசியத்தை ரிவீல் செய்த கேன் வில்லியம்சன்!.. நெகிழ்ச்சி சம்பவம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலியுடனான நட்பு மிகவும் சுவாரஸ்யமானது என நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்பவர்கள் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். இவர்கள் இருவரும் 19 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலிருந்தே அறிமுகம் ஆனவர்கள். எதிரெதிர் அணிகளுக்காக விளையாடி வந்ததால் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் உரசல்கள் இருந்தன. ஆனால், தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில், விராட் கோலியுடனான நட்பு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேன் வில்லியம்சன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் அணிகளில் விளையாடினோம். இளம் வயதிலேயே நாங்கள் சந்தித்துக் கொண்டது சிறப்பானது. அந்தப் பயணம் தற்போது வரையிலும் நன்றாகத் தொடர்கிறது. எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது மிகவும் சுவாரஸ்யமானது. நாங்கள் நீண்ட காலமாக ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடி வந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொடர்பான தங்கள் புரிதல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான எண்ணங்கள் மற்றும் ஆட்டக்களம் தொடர்பான வியூகங்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். தாங்கள் இருவரும் விளையாடுவதில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அதுவே தங்கள் தனித்துவமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.