'அம்மா சொல்லி கொடுத்த அந்த விஷயம்'... 'கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மறைவு'... நெஞ்சை உருக்கும் ட்விட்டர் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (76) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தெலுங்கானாவிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
![Telangana Governor Tamilisai Soundarajan’s mother passes away Telangana Governor Tamilisai Soundarajan’s mother passes away](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/telangana-governor-tamilisai-soundarajan-s-mother-passes-away.jpg)
சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதனிடையே தாயாரின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில்'பகிர்ந்துள்ளார்.
அதில், ''என்னைப் பார்த்துப் பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டுப் பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னைப் படைத்தார், என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழக் கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் (1/2) pic.twitter.com/keKjJUp4Sw
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)