"இதுக்கு என்ன பதில் சொல்றது"..சிறுமியின் அப்பா கேட்ட கேள்வி.. IAS ஆபிசர் போட்ட ட்வீட்.. அப்படி என்னய்யா கேட்டாரு?
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது 5 வயது மகளை ஐஏஎஸ் ஆக்க என்ன செய்ய வேண்டும் என தந்தை ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | "எங்க குழந்தைக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்".. கோவை பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!
பெற்றோர் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கனவுகளை ஆரம்ப காலத்திலேயே காணத் துவங்கிவிடுகின்றனர். இதன் பிரதிபலிப்பு குழந்தைகளிடத்திலும் இருப்பதை நாம் காணமுடிகிறது. சிறிய வயதிலேயே பொறியாளராக வேண்டும், மருத்துவராக வேண்டும் என பள்ளிகளிலேயே தங்களுக்கான பாதைகளை வகுத்துக்கொள்ள வழிவகுக்கிறது. அதே நேரத்தில், குழந்தைகளை என்ன படிக்க வைக்கவேண்டும்? எங்கே படிக்க வேண்டும்? என பெற்றோரின் எதிர்பார்ப்பும் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது.
அந்த வகையில் 5 வயது சிறுமி ஒருவரின் தந்தை, தனது மகளை ஐஏஎஸ் அதிகாரியாக உருவாக்க என்ன செய்ய வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேள்வி
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"மாலை வணக்கம் சார். எனது மகள் தற்போது 5 ஆம் வகுப்பு படிக்கிறார். அவள் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என நான் விருப்பப்படுகிறேன். அவளுக்கு எவ்விதமான சூழலை நான் உருவாக்கித் தரவேண்டும் என கூறினால் மகிழ்ச்சியடைவேன்.அவளுக்கு புத்தகம் படிக்க மிகவும் பிடித்திருக்கிறது. அவளது அறிவை விரிவாக்க ஏதேனும் புத்தகங்களை பரிந்துரை செய்யுங்கள். உங்களுடைய அன்பான வழிகாட்டுதல் தேவை" என ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன சொல்றது?
இந்த ஸ்க்ரீன்ஷாட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவனீஷ் சரண்,"இப்போது இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?" எனக் குறிப்பிட்டிருக்கிறார். நெட்டிசன்கள் இந்த பதிவில் பல்வேறு விதமான கமெண்ட்களை போட்டுவருகின்றனர். ஒருவர்,"சிறுமியின் சிறகுகளை பறக்க அனுமதியுங்கள். அவளது பாதையை அவளே தேர்நதெடுக்கப்பட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் மாணவர் ஒருவர்,"நான் 12-ஆம் வகுப்பு படிக்கிறேன். எனது தந்தையும் இதேபோல நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என வற்புறுத்துகிறார். எனது ஆசைகளை அவர் கேட்டதுகூட இல்லை. அந்த சிறுமியின் லட்சியத்தை அறிந்துகொள்ளும்படி அந்த தந்தைக்கு பதிலளியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,"சிறுமியின் தந்தைக்கு பதிலளியுங்கள் அவரது கேள்வியில் பாசம் மற்றும் அன்பு இருக்கிறது" என கமெண்ட் செய்துள்ளார்.
தனது மகளை ஐஏஎஸ் அதிகாரியாக்க என்ன செய்யவேண்டும் என 5 வயது சிறுமியின் தந்தை கேள்வியெழுப்பிய நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண் போட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
