"உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்".. தனது 10 ஆம் வகுப்பு மார்க்ஷீட்டை ஷேர் செஞ்ச ஐஏஎஸ் ஆபீசர்.. மார்க்கை பாத்துட்டு திகைச்சுப்போன நெட்டிசன்கள்..வைரல் PIC..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மதிப்பெண் சான்றிதழ்
சாதாரண பின்புலத்தில் இருந்து தங்களது உழைப்பில் முன்னேறி சமூகத்தில் உயர்ந்த நபர்கள் பலரும் எப்போதும் பலருக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்வது உண்டு. அனைவரும் கடின உழைப்பின் மூலம் முன்னேறலாம், அதற்கு பொருளாதாரமோ, மதிப்பெண்களோ தடை இல்லை என்பதை பலரும் வலியுறுத்தியிருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரியான ஷாஹித் சவுத்ரி தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
ஷாஹித் சவுத்ரி
பழங்குடியினர் நலத்துறை செயலாளராக பணிபுரிந்து வரும் ஷாஹித் சவுத்ரி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக பிரதமரின் விருதினை வென்றவர். அன்றாட வாழக்கையில் தன்னை பாதித்த விஷயங்கள், வேலை வாய்ப்புகள், தன்னம்பிக்கை அளிக்கும் அசாத்திய நபர்கள் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதனாலேயே இவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஷாஹித் சவுத்ரி தற்போது தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட்டுள்ளார். இது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோரிக்கை
அந்த பதிவில்,"மாணவர்களின் கோரிக்கையின் பேரில், எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இதோ! 339/500” எனக் குறிப்பிட்டுள்ளார். அதில், 1997 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில வாரியத்தின் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஆங்கிலத்தில் 70 மதிப்பெண்களும், கணிதத்தில் 55 மதிப்பெண்களும், ஹிந்தி மற்றும் உருதுவில் 71 மதிப்பெண்களும், அறிவியலில் 88 மதிப்பெண்களும், சமூக படிப்பில் 55 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.
On students’ demand, here’s my Class-X Mark-sheet which has remained “classified” since 1997 😄! 339/500 pic.twitter.com/9ga6tJRkHU
— Shahid Choudhary (@listenshahid) July 20, 2022
இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, முன்னாள் ராணுவ அதிகாரியான பிரிகேடியர் சுபாஷ் பன்வார்,"உங்களுடைய எளிமை, நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவை நம் நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.