'கூகுள் மேப்புக்கே' சவால் விடும் தமிழக வியாபாரி... இதுக்கு மேல ஒருத்தரால வழி சொல்ல முடியுமா?... 'வேற லெவல்' விளக்கம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 14, 2020 11:23 AM
நகைக்கடைக்காரர் ஒருவர் தனது கடைக்கு வரும் வழியை விளக்கி விளம்பர போஸ்டர் தயாரித்த யுக்தி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

தங்க நகை வாங்க பொதுவாக பெரிய கடைகளைத் தான் பெண்கள் தேர்ந்தெடுப்பார்கள். மாளிகை போன்று காணப்படும் இதுபோன்ற கடைகளுக்கு பெண்களை வரவழைக்க அதன் உரிமையாளர்கள் லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து விளம்பரம் செய்வார்கள்.
அதே நேரம் நகரில் உள்ள சிறிய நகைக்கடைகளுக்கு வாடிக்கையாளர்களை வரவழைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம். இந்த சவாலை உடைக்கும் விதமாக அந்தியூரில் நகைக்கடைக்காரர் ஒருவர் விளம்பரத்திற்காக கையாண்ட புது ஸ்டேடர்ஜி தற்போது வைரலாகி வருகின்றது.
இதில் கடைக்காரர் தனது கடை விளம்பரத்திற்காக அடிக்கப்பட்டுள்ள நோட்டீசில் தொலைபேசி எண்கள் , கடையின் பெயர், முகவரி என அனைத்தையும் கொடுத்து விட்டு தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் நபரின் தொந்தரவையும் நாசுக்காக வெளியிட்டுள்ளார்.
அதில், முன் கடைக்காரர் தனது கடை தெரியாமல் இருக்க போர்டு வைத்து மறைத்திருப்பார். மறைவு தாண்டி தன் கடைக்கு வாருங்கள் என அச்சடித்துள்ளார். இந்த நோட்டீஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கூகுள் மேப்பில் கூட இப்படி வழி சொல்லியிருக்க முடியாது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
