'ராஜா சாரும் தல தோனியும்'... 'டிராக்டர் சத்தத்தை வென்ற இசைஞானியின் இசை'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இசைஞானியின் இசை ஒலிக்க தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றைச் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய தோனி, ஐபிஎல் போட்டியில் களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டம் காண செய்தது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் தோனி தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
இந்நிலையில் தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றைச் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி டிராக்டரை ஓட்டிக் கொண்டு வருகிறார். அந்த வீடியோவுக்கு மௌன ராகம் படத்தில் வரும், இளையராஜாவின் இசையைக் கோர்த்து சி.எஸ்.கே வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இளையராஜா மற்றும் தோனியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#Thala Dhoni meets Raja Sir in his newest beast! 😍 #HBDIlayaraja #WhistlePodu pic.twitter.com/dNQv0KnTdP
— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2020

மற்ற செய்திகள்
