சத்தமா பாட்டு வைக்காதிங்க.. திருமண ஊர்வலத்தில் எழுந்த சிக்கல்.. கலவரமான கல்யாண வீடு..
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் திருமண வீட்டில் சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்டதாக கூறி இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | எதுக்கு என் நம்பரை Block செஞ்ச?.. நண்பனின் வீட்டுக்கு வந்து கேள்விகேட்ட இளம்பெண் செஞ்ச பகீர் காரியம்..!
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அப்போது திருமண வீட்டார் சத்தமாக பாடல்களை இசைத்ததாக ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருமண ஊர்வலத்தின்போது குறிப்பிட்ட பகுதியை கடக்கும் வேளையில் பாடல்களை இசைக்க கூடாது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
திருமண ஊர்வலம்
இந்நிலையில் திருமண ஊர்வலத்தின் போது சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்டதாகவும் அதனால் திருமண வீட்டில் நுழைந்து சிலர் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. மேலும் ஒரு தரப்பினர் திருமண விழாவில் கூடியிருந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மணமகளின் சகோதரர் அங்கித் மால்வியா "திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து பாடல்களை நிறுத்துமாறு சொன்னார். அப்போது சிறிது நேரம் பாடல்கள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனால் அவர்கள் கற்களை கொண்டு தாக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர்" என்றார்.
சிக்கல்
இது குறித்து பேசிய ராஜிபூர் காவல் நிலைய அதிகாரி பிரபாத் காவுத்,"அந்த பகுதி மக்களிடம் பேசிய போது குறிப்பிட்ட இடத்தின் வழியாக செல்லும் வேளையில் பாடல்கள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருமண வீட்டார் பாடல்களை தொடர்ந்து இசைத்ததால் சிக்கல் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்" என்றார்.
திருமண வீட்டில் கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரையில் 7 பேரை கைது கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமண வீட்டில் இரு தரப்பினரிடையே கல்வீச்சு தாக்குதல் நடந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8