தெற்காசியாவின் முக்கியமான 'உலகப்பட இயக்குநர் கிம் கி டுக் கொரோனாவால் மரணம்!'.. நடந்தது என்ன?'.. தமிழ் இயக்குநர்கள் உருக்கம்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாசர்வதேச உலக சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர் தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் கொரோனாவால் காலமானார்.
லட்வியா நாட்டில் ரிகா நகரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயதான கிம் கி டுக், லட்வியா நாட்டில் வீடு வாங்க, நவம்பர் 20ஆம் தேதி அங்கு சென்றதாகவும், அப்போது ஜுர்மலா என்கிற பகுதியில் கடல் பக்கம் இருக்கும் வீடு ஒன்றை வாங்க முடிவெடுத்ததாகவும், அதன் பின்னர் கிம், அதுபற்றிய அடுத்தடுத்த சந்திப்புகள் எதற்கும் அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும் இதனால் கவலையுற்ற அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைகளில் தொடங்கி பல இடங்களில் தேட, அந்த நாட்டில் இருக்கும் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களால் கிம்மைக் கண்டுபிடிப்பது இன்னும் சிரமமாக இருந்தது. இதனிடையே கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிம் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
உலக அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த தெற்காசியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கிம் கி டுக், சமாரிடன் கேர்ள், 3 அயர்ன், ஒன் ஆன் ஒன் ஆகிய படங்கள் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். தவிர, பெர்லின், கான்ஸ் என பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார். வெனிஸ் விழாவில் மட்டும் 3 விருதுகளை கிம் வென்றிருக்கிறார்.
South Korean director #KimKiDuk
Kim Ki-duk passed away due to COVID-19 complications on Friday. He was 59.
உங்கள் சில படைப்புகளை விமர்சனங்களோடு நேசித்தவன்.சில படங்களை ஆராதித்தவன்.
உலக சினிமாவிற்கு பேரிழப்பு.வரலாறு உங்களை மறக்காது. இதய அஞ்சலி. pic.twitter.com/8DGLCEZuwm
— R.Seenu Ramasamy (@seenuramasamy) December 11, 2020
கொரிய நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மறைந்த Kim ki- duk இன் புகழ்பெற்ற Spring Summer ...., படத்தில் ஒரு காட்சி pic.twitter.com/V9ZdHCtOv4
— Dr Ravikumar M P (@WriterRavikumar) December 11, 2020
14 ஆண்டுகளுக்கு முன் என் பங்காளி திருமுருகனும் நானும் 3 iron படம் இணைந்து பார்த்தோம்.... அதிசயித்தோம் , ஆனந்தப்பட்டோம் ,...
Posted by Shanmugam Muthusamy on Friday, 11 December 2020
இவருக்கு உலகத் திரைக்கலைஞர்கள் தொடங்கி, தமிழ்க் கலைஞர்கள் வரை இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தர்மதுரை உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சீனு ராமசாமி, ஜிவி பிரகாஷின் அடங்காதே பட இயக்குநரும், ரணசிங்கம் படத்தின் வசனகர்த்தாவுமான சண்முகம் முத்துசாமி என பலரும் தங்களது இரங்கல்களை பதிவிட்டுள்ளனர்.