'கேரள' தேர்தல் முடிவுகள் குறித்து.. ஒரே வரியில் சித்தார்த் போட்ட 'ட்வீட்'.. இணையத்தில் இப்போ செம 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திமுக, சுமார் 150 தொகுதிகள் வரை முன்னிலையில் உள்ள நிலையில், கேரள மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி, பெருன்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது. இதனால், தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகவுள்ளது, கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டரில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த், கேரள முதலவர் பினராயி விஜயன் அவர்களின் வெற்றிக்கு பின்னர் ஒரே வரியில், கேரள தேர்தல் முடிவு குறித்து, ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதில், முதல்வர் பினராயி விஜயனின் வெற்றியைக் குறிப்பிட்டு, 'பின்றாருயா விஜயன்' என பதிவிட்டுள்ளார்.
Pinrarya Vijayan.#ElectionResults2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021
நடிகர் சித்தார்த்தின் இந்த ட்வீட், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
