"ப்ளீஸ் சார்.. இந்த உதவியை மட்டும் செஞ்சுகொடுங்க சார்"..மீட்டிங்கில் CM முன்னாடி அழுதுகிட்டே பேசிய சிறுவன்.. அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் தனக்கு தரமான கல்வி வேண்டும் என 11 வயது சிறுவன் கோரிக்கை வைத்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Also Read | "ஒரு பொண்ணுக்கு 3 முறை கல்யாணமா.?".. இந்த கிராமத்தில் தொடரும் வியக்க வைக்கும் கலாச்சாரம்..!
கோரிக்கை
பீகாரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது, அந்த விழாவுக்கு வந்திருந்த 11 வயதான சோனு என்னும் சிறுவன் முதலமைச்சர் முன்பாக சென்று அழுகையுடன் பேசத் துவங்கினான். முதல்வரிடம், தனக்கு நன்றாக படிக்கவேண்டும் என ஆசை இருப்பதாகவும் தனியார் பள்ளியில் படிக்க வசதி இல்லாததால் தனக்கு உதவவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறான் ஆறாம் வகுப்பு படிக்கும் சோனு.
அழுகையுடன் பேசுகையில் சோனு,"நான் படிக்கும் பள்ளியில் நல்ல கல்வியை ஆசிரியர்கள் அளிக்கவில்லை. தனியார் பள்ளிகளில் படிக்க எங்களிடத்தில் வசதி கிடையாது. ஆகவே, தனியார் பள்ளியில் படிக்க உதவி செய்யுங்கள்" என்று உருக்கமாக குறிப்பிட்டான்.
நடவடிக்கை
சோனுவின் கோரிக்கையை கவனமாக கேட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அப்போதே உத்தரவிட்டார். இது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து பேசிய சிறுவன்,"என்னுடைய தந்தை தயிர் வியாபாரம் செய்துவருகிறார். ஆனால் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் மதுவிற்கே செலவிடுகிறார். சில நேரங்களில் நானும் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்துவருகிறேன். 40 மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பதால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடிகிறது. எனக்கும் நல்ல கல்வி கிடைத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்ந்த இடத்திற்கு சென்றுவிடுவேன். என்னால் பணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க இயலாது. ஆகவே அரசு உதவினால் நன்றாக இருக்கும்" என உருக்கத்துடன் குறிப்பிட்டான்.
2021 ஆம் ஆண்டு UNESCO வெளியிட்ட அறிக்கையின்படி, பீஹாரில் உள்ள பள்ளிகளில் 56 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றில் 89 சதவீதம் அரசு பள்ளிகளாகும். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாநிங்களில் பீஹார் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு நல்ல கல்வி வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த சோனுவை அக்கம் பக்கத்தினர் பாராட்டி வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8