'ஸ்கூல் பையன்' மாதிரி விளையாடிட்டு இருக்காரு...! 'பேட்டையும் ரெண்டா ஒடச்சு...' 'பார்க்கவே எனக்கு பரிதாபமா இருந்துச்சு...' - விளாசி தள்ளிய வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று (19-09-2021) மீண்டும் இரண்டாம் கட்டமாக தொடங்கியது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதி கொண்டனர். முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
![Emotional Dale Steyn opens up to Raina about his cricket Emotional Dale Steyn opens up to Raina about his cricket](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/emotional-dale-steyn-opens-up-to-raina-about-his-cricket.jpg)
அதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
என்னதான் சென்னை அணி நேற்றைய தொடரை கைப்பற்றினாலும், முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து ரசிகர்களை துடிக்க விட்டனர் மும்பை இந்தியன்ஸ்.
அதோடு, கிரிக்கெட் ரசிகர்களால் தல தோனிக்கு பிறகு அன்பாக 'சின்ன தல' என அழைக்கப்படும் ரெய்னா மிக மோசமாக விளையாடினார். நேற்று 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ராகுல் சாகரிடம் கேட்ச் ஆனார்.
அதோடு, போல்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்திற்கு பயந்து ஒதுங்கிய போது அவுட் ஆகினார். ரெய்னா சந்தித்த 6-வது பந்து பட்டு மட்டை இரண்டாக உடைந்து, பந்து பாயிண்ட் பகுதியில் கேட்ச் ஆனது.
ரெய்னாவின் பேட்டிங் குறித்து கெவின் பீட்டர்சன் கூறும் போது, 'தோனிக்கு பிறகு சின்ன தல என சொல்லப்படும் ரெய்னா தான் என ரசிகர்கள் நினைத்து வந்தனர். தோனி விட்ட இடத்திலிருந்து ரெய்னா தொடர்வார் என நினைத்தால், தொடர்ந்த இடத்தையே விட்டு விட்டார்' எனக் கூறினார்.
இதற்கு டேல் ஸ்டெய்ன் (Dale Steyn) கூறிய கருத்தில், 'நேற்றைய மேட்சில் ரெய்னா ஒரு இன்டர்நேஷனல் கிரிக்கெட் வீரர் போல் இல்லாது, ஸ்கூல் பாய் கிரிக்கெட் வீரர் போல் இருந்தார்.
ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இப்படி ஆடுவாரா என எனக்கே சந்தேகமாக இருந்தது. ஆட்டத்தில் அவரது மட்டையும் உடைந்து பரிதாபமாக வெளியேறினர்' எனக் கூறினார் டேல் ஸ்டெய்ன்.
ஐபில் மேட்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா 3-வது இடத்தில் இருக்கிறார் என்றாலும் அவர் ஷார்ட் பிட்ச் பந்துக்கு பயப்படும் போது பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது என சில நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)