'ரியாவின் கைக்கு போதை பொருள் வந்தது எப்படி'?... 'இப்படி தான் சுஷாந்தின் கைக்கு போனது'... அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகை ரியா தனது காதலனும் நடிகருமான சுஷாந்த் சிங்கிற்கு எப்படி போதைப் பொருட்களை வாங்கி கொடுத்தார் என்பது குறித்த தகவலை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே அவரது மரணத்திற்கும், போதைப்பொருளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், இந்தி திரையுலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி, இவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டுமேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே ரியா தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். அதில், ''தனது தம்பி சோவிக் மூலம் நடிகை ரியா காதலன் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்துள்ளார். போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பாரிகர், கைசான் இப்ராகிம் ஆகியோரிடம் இருந்து சோவிக் போதைப்பொருளை வாங்கியது தெரியவந்துள்ளது. அதைத் தனது சகோதரி ரியாவிடம் அவர் கொடுத்துள்ளார். ரியா அதை மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்'' என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
