அவங்க 'இறந்ததுக்கு' அப்றமும்,, பல நாளுக்கு அவங்க 'ஃபோன்' ஆக்டிவா இருந்திருக்கு,,.. வெளியான அதிர்ச்சி 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தற்போது சிபிஐ பல்வேறு கோணங்களில் தற்போது விசாரித்து வரும் நிலையில், சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான் தற்கொலை தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

திஷா சலியான் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். மும்பை போலீஸ் அளித்த தகவலின் படி, திஷா தனது வீடு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததது. இதனைத் தொடர்ந்து, திஷா உயிரிழந்து பல நாட்களாக, அவரின் செல்போன் பயன்பாட்டில் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜீ நியூஸ் அளித்துள்ள தகவலின் படி, திஷா இறந்து அடுத்த ஒரு வாரத்திற்கும் மேல், அவரது போனில் இருந்து ஜூன் 9 முதல் 17 ஆம் தேதி வரை இன்டர்நெட் அழைப்புகள் சென்றுள்ளது. ஆனால், அவரது போனை யார் பயன்படுத்தியது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது போனில் இருந்து 3 அழைப்புகள் சென்ற நிலையில், ஒரு நாளுக்கு முன்னர் 36 அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொலைபேசி எண், திஷாவின் நெருங்கிய தோழியான ஏக்தா என்பது தெரிய வந்தது.
திஷா தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்த மும்பை போலீஸ், அவரது செல்போனை ஆய்வு செய்யத் தவறியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, திஷாவின் போனை யார் பயன்படுத்தினார் என்பது குறித்தும், அவர் யாருக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறித்தும் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
