காருக்குள்ள ஒரு 'ஸ்வீட் பாக்ஸ்' இருந்துச்சு...! 'அப்படி என்ன ஸ்வீட் உள்ள இருக்குன்னு...' - திறந்து பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் அரசாங்கத்தினால் உரிமம் பெறப்பட்ட போதை பொருளான ஓபியம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தொழிற்சாலை காசிப்பூர் மற்றும் நீமுச்சில் இயங்கி வருகிறது.
குத்தகை அடிப்படையில் ஓபியம் சாகுபடி செய்யப்படுவதால், அதிகாரிகளுக்கு லஞ்சம் தராதவர்களின் ஓபியத்தை தரமில்லை எனக் கூறி வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இப்படியான போதை பொருள் பயிரிடுதல் தொடர்பான விவகாரங்களை ஐஆர்எஸ் அதிகாரி தலைமையிலான குழு ஒன்று கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பிக்கு லஞ்சம் வழங்கப்படுவது குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தன. இந்த நிலையில் , காசிப்பூர் மற்றும் நீமுச் ஓபியம் தொழிற்சாலையின் மேலாளரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான டாக்டர் ஷஷாங்க் யாதவ், லஞ்சப் பணத்துடன் சம்பல் ஆற்றின் தொங்கும் பாலம் டோல் பிளாசா வழியாக காரில் சென்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் ஷஷாங்க் யாதவின் காரை மடக்கிய போலீசார், சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 16 லட்சத்து 32 ஆயிரத்து 410 ரூபாயை கைப்பற்றினர். இதுபற்றி கோட்டா கூடுதல் எஸ்பி குமார் கூறும்போது, ‘குற்றம்சாட்டப்பட்ட ஷஷாங்க் யாதவின் காரில், ஸ்வீட் பாக்ஸ் இருந்தது. அதில், ரூ. 15 லட்சம் ரொக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், மடிக்கணினி மற்றும் பணப்பையில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரத்து 410 ரூபாயும் இருந்தது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், அவர் மீது ஏற்கனவே லஞ்சம் வாங்கியதாக பல புகார்கள் வந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஐஆர்எஸ் டாக்டர் சஷாங்க் யாதவ், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வசிக்கிறார். எனவே வாங்கிய லஞ்சப் பணத்துடன் அங்கு சென்றுக் கொண்டிருக்கும்போது தான் சிக்கியுள்ளார்.' இவ்வாறு தெரிவித்துள்ளார்.