'பணி நேர SHIFT-ஐ மாற்றுவதில் தகராறு'!.. ஊழியரின் வேலைக்கு உலை வைத்த பன்னாட்டு நிறுவனம்!.. ரூ. 932 கோடி நஷ்டஈடு கொடுக்க உத்தரவு!
முகப்பு > செய்திகள் > உலகம்டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரை நீக்கியதற்காக வால்மார்ட் கடுமையான எதிர்வினையை சந்தித்துள்ளது.
மார்லோ ஸ்பெத் என்ற பெண், டவுன் சிண்ட்ரோம் (down syndrome) நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் வால்மார்ட் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த பெண் ஊழியரின் பணி நேர ஷிஃப்டில் சில மாறுதல்களை செய்துள்ளது வால்மார்ட். ஆனால், அவரது நோய் காரணமாக அந்த ஷிஃப்டில் பணி செய்ய முடியாது என அவர் சொல்ல, திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து, அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் ஆணையத்தின் மூலம் தற்போது அவருக்கு நீதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான 'வால்மார்ட்' பதினாறு ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணி நீக்கம் செய்தமைக்காக 125 மில்லியன் (ரூ.932 கோடி) அமெரிக்க டாலர்களை அவருக்கு செலுத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழியர் நலன் சார்ந்த சட்ட ரீதியாக இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.