‘உடலுறுப்பு’ தானம், ‘ஓவியங்கள்’... ‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகளின் ‘கடைசி’ ஆசைகள் குறித்து வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட முகேஷ், வினய் இருவரும் தங்களுடைய இறுதி ஆசைகளை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, அக்ஷய் குமார், வினய் சர்மா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிப்பட்ட நிலையில், அவர்கள் அதை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் தாக்கல் செய்த அனைத்து சீராய்வு மற்றும் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 4 பேரையும் இன்று தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களிடம் கடைசி ஆசை குறித்து கேட்கப்பட்டபோது, நான் இறந்த பிறகு எனது உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன் என முகேஷ் கூறியதாகவும், தான் வரைந்த ஓவியங்களை சிறை கண்காணிப்பாளருக்கு வழங்க விரும்புவதாக வினய் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வினய் தன்னுடைய Hanuman Chalisa எனும் ஓவியத்தை மட்டும் குடும்பத்தினருக்கு வழங்க விரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.