“இதோ, இங்க தான் இருக்கு... நல்லா தோண்டுங்க...” - 'தங்கப்' புதையலைத் தேடி... 'கம்பி', கடப்பாரைகளுடன் ஆயிரக்கணக்கில் குவிந்த 'மக்கள்'...! - 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆற்றங்கரையோரம் புதையல் கிடைப்பதாக வதந்தி ஒன்று கிளம்பிய நிலையில் அப்பகுதியில் மக்கள் அனைவரும் குழி தோண்டி புதையலை தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வடக்கே சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராஜ்கர் மாவட்டம். இந்த மாவட்டத்திலுள்ள சிவபுரா என்னும் கிராமத்தில் அமைந்துள்ள பார்வதி நதி அருகே, சில தினங்களுக்கு முன் பழங்கால நாணயங்கள் சில, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த தகவல் அங்குள்ள சுற்று வட்டாரத்தில் வேகமாக பரவிய நிலையில், முகலாயர் காலத்துக்கு முற்பட்ட புதையல் ஆற்றில் இருப்பதாக வதந்தி பரவியது. இதனை நம்பி அங்குள்ள மக்கள் அனைவரும் பார்வதி நதி அருகே புதையல் வேட்டையைத் தொடங்கினர்.
இந்நிலையில், ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் குழிகளை தோண்டி பழங்கால தங்க, வெள்ளி நாணயங்கள் கிடைக்கின்றனவா என இரவு பகலாக பொது மக்கள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பார்வதி நதி அருகே புதையல் உள்ளதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.
ஆனால், காவல்துறையின் அறிவிப்பை ஏற்க மறுத்து பொது மக்கள் கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு புதையல் தேடுதலில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஒருவர், '24 மணி நேரமும் தொடர்ந்து புதையல் இருக்கிறதா என தேடி வருகிறோம். எங்களுக்கு பழங்கால நாணயம் கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
People in MP village go on digging spree in hope to find gold, silver coins near Parvati river at Rajgarh
Track latest news updates here https://t.co/Dds9stcZZr pic.twitter.com/QN4N4R20hP
— Economic Times (@EconomicTimes) January 11, 2021
அதே போல, சில தினங்களுக்கு முன் கிடைத்த நாணயங்களை தொல்லியல் துறை சோதனை செய்ததில் அவையனைத்தும் வெண்கலம் மற்றும் இரும்பினால் ஆனது என்றும், மக்கள் நினைப்பது போல தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், யார் கேட்பதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அப்பகுதி மக்கள் புதையல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் மக்கள் சூழ்ந்து கடும் பரபரப்புடன் காணப்படுகிறது.