எங்களுக்கு லட்டு கொடுக்கல.. ரகளையில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டார்.. கல்யாண வீட்டில் நடந்த சோகம்.. அதுக்கப்பறம் நடந்துதான் ஹைலைட்டே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்டீஸ்கர் மாநிலத்தில் தங்களுக்கு விருந்தில் லட்டு வழங்கப்படவில்லை என மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை நிறுத்த காவல்துறையிடம் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | எனக்கே இவரை பாக்கணும் போல இருக்கு.. ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த வினோத வாகனம்.. வைரலாகும் வீடியோ..!
லட்டு
தென்னிந்திய மக்களுக்கு ஒரு இனிப்பு பண்டமாகவே தோன்றும் லட்டு, வட இந்தியாவில் முக்கிய சம்பிரதாய உணவுப் பொருளாக இருக்கிறது. வட இந்திய திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் ஒன்று சேர்ந்து விசேஷத்தின் துவக்க நிகழ்வான விநாயகர் பூஜையில் ஈடுபடுவர். அதன்பிறகு இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் லட்டு வழங்கப்படுகிறது. அதன்பின்னரே திருமண கோலாகலங்கள் ஆரம்பிக்கும். அப்படி திருமணங்களில் ஆதிக்கம் செலுத்தும் லட்டுதான் ஒரு திருமணத்திற்கே தடையாக அமைந்து இருக்கிறது.
சண்டை
சட்டீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் ஸர்வதா பகுதியில் கடந்த 23 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதில் மாப்பிள்ளை வீட்டார் விருந்தின்போது தங்களுக்கு லட்டு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட அதுவே பெரிய பிரச்சினை ஆகிப்போனது. இருவீட்டாரும் லட்டினால் ஏற்பட்ட சண்டையில் ஆக்ரோசமாக பேசிக்கொள்ள கல்யாணத்தை நிறுத்துவதாக மாப்பிள்ளை வீட்டார் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத்தொடர்ந்து மண்டபத்தில் இருந்து வெளியேறிய மணமகன் வீட்டார் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றையும் அளித்திருக்கின்றனர்.
புகார்
பகுதியிலுள்ள கொட்வாலி காவல் நிலையத்திற்கு சென்ற மணமகன் வீட்டார் திருமண விருந்தின் போது தங்களுக்கு லட்டு வழங்கப்படவில்லை. இதனால் இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து பேசிய அந்த காவல் நிலையத்தின் பொறுப்பாளர் கேஷர் பராக் "கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி குந்தி மற்றும் சூரஜ் சாகு ஆகியோருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த விசேஷத்தின் போது மணமகன் வீட்டார் தங்களுக்கு லட்டு வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் விருந்தில் யாருக்கும் லட்டு வழங்கப்படவில்லை. இதனையடுத்து இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்படவே மணமகன் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்தனர்" என்றார்.
டும் டும் டும்
கல்யாணம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்ததுடன் இரண்டு வீட்டினர் வீட்டினரையும் சமாதானம் பேச அழைத்து இருக்கின்றனர். இதன் பலனாக அடுத்த நாள் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் குந்தி மற்றும் சூரஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
தங்களுக்கு லட்டு கொடுக்கப்படவில்லை என மணமகன் வீட்டார் கல்யாணத்தை நிறுத்திய நிலையில் காவல்துறை தலையிட்டு திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8