26 வயசுல மரணம்.. மைக்ரோசாஃப்ட் சிஇஓ-வின் மகன் பற்றி வெளியான உருக்கமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ய நாதெள்ளா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டில் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பணி உயர்வு செய்யப்பட்டார். உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சத்ய நாதெள்ளா சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சத்யா நாதெள்ளா
கூகுள் நிறுவனத்தில் சிஇஓவாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். இதற்கு பிறகு உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டுக்கு இந்தியர் ஒருவர் தேர்வானது பெரிதும் பேசப்பட்டது.
ஜைன் நாதெள்ளா
சத்யா நாதெள்ளாவிற்கு ஜைன் நாதெள்ளா என்ற மகனும் (வயது 26), திவ்யா நாதெள்ளா மற்றும் தாரா நாதெள்ளா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மகன் ஜைன் நாதெள்ளா பிறவியிலேயே தசை இயக்கம், தசைநார் பெருமூளை வாதம் ஆகிய குறைகளுடன் பிறந்தார் என சொல்லப்படுகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார்.
இரங்கல்
ஜைன் நாதெள்ளா மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நமது சிஇஓ சத்யா நாதெள்ளா மகன் ஜைன் நாதெள்ளாவின் மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.