“பதஞ்சலியின் கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா?”... சென்னை உயர்நீதிமன்றம் போட்ட ‘புதிய’ உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் கொரோனா மருந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் ரூபாய் 10 லட்சம் அபராதமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த அனுமதியை சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கிறது.
![MHC permits patanjali coronil tablets for 2 weeks MHC permits patanjali coronil tablets for 2 weeks](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/mhc-permits-patanjali-coronil-tablets-for-2-weeks.jpg)
முன்னதாக கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அதற்கு கொரோனில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.
ஆனால் இந்த கொரோனில் என்கிற பெயரை பயன்படுத்துவதற்கு பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும், என்ற கோரிக்கையுடன் கொரோனில் என்ற பெயரில் இயந்திரங்களை சுத்தப்படுத்தக்கூடிய இராசயன கலவையை தயாரிக்கக்கூடிய சென்னை நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன் இந்த கொரோனில் என்கிற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு தடை விதித்ததுடன், அந்நிறுவனத்துக்கு 10 லட்சம் அபாராதம் விதித்தும் தீர்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பதஞ்சலி நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இந்த மருந்துகள் ஆயுஷ் அமைப்பு மற்றும் மத்திய அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பின்பே இந்த விற்பனையை தொடங்கியதாகவும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, 2 வாரங்களுக்கு பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மருந்து மீதான தடை நீக்கப்பட்டதுடன், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)