Naane Varuven M Logo Top

"அந்த 1:30 மணி நேரம், TV, செல்போன்'னு எதையும் USE பண்ண கூடாது".. அதிரடி நடைமுறையை FOLLOW பண்ணும் கிராமம்.. காரணம் இது தான்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Sep 26, 2022 02:51 PM

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் கையில் செல் போன், லேப்டாப், கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேட்ஜட் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

maharashtra village people follows digital detox every evening

Also Read | கோப்பையை கையில் வாங்கியதும்.. நேராக வந்த ரோஹித் செய்த காரியம்.. கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ!!

அது மட்டுமில்லாமல், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு கூட மொபைல் போன் உள்ளிட்ட விஷயங்களை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேலும், ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் வரை ஒரு நபர், மொபைல் போனில் நேரத்தை செலவிடுவதாக ஆய்வுகள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், மொபைல் போன் என்ற விஷயம் மக்களின் வாழ்வில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஒரு கிராமத்திலுள்ள மக்கள் செய்து வரும் விஷயம், இணையத்தில் அதிகம் Trend ஆகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மோஹித்யாஞ்சே வத்காவோன் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் மிகவும் அதிரடியான ஒரு நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது இந்த கிராமத்தில் உள்ள மக்கள், மாலை 7 மணி முதல் இரவு 8:30 மணி வரை செல்போன், டிவி, லேப்டாப், டேப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்த விதமான எலக்ட்ரானிக் கேட்ஜட் பொருட்களையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்பது தான் அது.

மேலும் இந்த ஒன்றரை மணி நேரத்தில், புத்தகம் படிப்பது, அக்கம் பக்கத்தினருடன் பேசுவது, பாடத்தில் உள்ள சந்தேகங்களை மாணவ மாணவிகள் கேட்டறிந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக கிராமத்தில் சரியாக 7 மணிக்கு சைரன் ஒலி எழுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த ஒலி வந்ததும் மக்கள் எந்த மின்னணு சாதனங்களையும் பயன்படுத்த மாட்டார்கள்.

இதன் பின்னர், சரியாக 8:30 மணிக்கு சைரன் ஒலி மீண்டும் எழுப்பப்படும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, மக்கள் அனைவரும் வழக்கம் போல செல்போன், டிவி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தொடங்குவார்கள்.

இது தொடர்பாக பேசும் அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர், இந்த நடைமுறை சமூக வலைத்தளங்களில் மக்கள் மூழ்கி கிடப்பதை தடுக்க உதவுகிறது என்றும், அந்த ஒன்றரை மணி நேரத்தை அர்த்தமுள்ள முறையில் செலவிட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read | "மரணம் யார் எங்கள பிரிக்க..?" - கணவர் உயிரிழந்த பிறகு.. மனைவிக்கு நேர்ந்த துயரம்!! கலங்க வைத்த சம்பவம்..

Tags : #MAHARASHTRA #VILLAGE #DIGITAL DETOX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maharashtra village people follows digital detox every evening | India News.