'அவர் பண்ணது மன்னிக்கவே முடியாது...' வீடியோ காலில் 'அப்படி' வந்த வக்கீல்...! என்ன இதெல்லாம்...? - ஷாக் ஆன நீதிபதி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி உச்சநீதிமன்றத்தின் காணொலி வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் சட்டையில்லாமல் ஆஜரானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுதுள்ளது.
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிகழ்வுகள் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. அதுபோல இந்தியாவிலும் மென்பொருள் அலுவலகங்களும் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையில் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமில்லாமல் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதி மன்றங்களும் காணொலி காட்சிகள் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது டெல்லி உயர்நீதி மன்றத்தில், சுதர்சன் என்ற தொலைக்காட்சி மதவாதத்தை தூண்டும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பான வழக்கை, நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்துள்ளது. அப்போது OpIndia என்ற இணைய தளத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டையில்லாமல் ஆஜராகியுள்ளார்.
சட்டையில்லாமல் வந்த வழக்கறிஞரை கண்டு அதிர்ச்சியான நீதிபதிகள் என்ன இது என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் காணொலியை விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் மன்னிக்க முடியாத செயல் என அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.