'ரோஹித் INJURY... அதுக்காக ஏன் VICE CAPTAIN பதவிய பறிச்சாங்க?'.. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ!.. அடுத்தடுத்து வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Oct 27, 2020 07:25 PM

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு புதிய துணை கேப்டனை அறிவித்துள்ளது பிசிசிஐ.விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஆடி வரும் கேஎல் ராகுல் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

india australia new vice captain why rohit sharma replaced

இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நிரந்தரமான மாற்றமா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

இந்திய வீரர்கள் தற்போது 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ளனர். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

india australia new vice captain why rohit sharma replaced

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி முதலில் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி பங்கேற்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல உள்ளர் வீரர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. ஆனால், பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

india australia new vice captain why rohit sharma replaced

அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு இருந்தார்.  ரோஹித் சர்மா பெயர் ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி என மூன்றிலும் இடம் பெறவில்லை. அவருக்கு ஏன் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்திருந்தது.

அவருக்கு தற்போது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார் என கூறி இருந்தது. ரோஹித் சர்மா நீக்கப்பட்டது மட்டுமின்றி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு புதிய துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரும் துவக்க வீரர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. புதிய துணை கேப்டன் அறிவிப்பு பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது. 

india australia new vice captain why rohit sharma replaced

ஒருவேளை ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு பாதி தொடரில் அணியில் இடம் பெற்றால் அப்போது அணியின் துணை கேப்டனாக யார் செயல்படுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எதற்காக மொத்த தொடரிலும் ரோஹித்தை நீக்க வேண்டும்? எதற்காக ஒட்டுமொத்த தொடருக்கும் புதிய துணை கேப்டனை அறிவிக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பவே மாட்டார் என்ற ரீதியில் தான் துணை கேப்டன் அறிவிக்கப்பட்டரா என்றும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் வெளியானது. 

india australia new vice captain why rohit sharma replaced

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் புகைப்படம் தான் அது. ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் ஆட முடியாத நிலை என்றால், எப்படி ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்? என விமர்சகர்கள் கேட்டுள்ளனர். 

இந்திய அணியில் 2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் ஏற்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அது தான் தற்போது ரோஹித் சர்மா நீக்கத்திற்கு காரணமா? என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

india australia new vice captain why rohit sharma replaced

ரோஹித் சர்மா போன்றே சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டுள்ள மற்றொரு வீரர் ரிஷப் பண்ட். டெஸ்ட் அணியில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவர் உடல் எடை அதிகமாக இருப்பதாக கூறி தேர்வுக் குழு அவரை புறக்கணித்துள்ளது. இப்படி எல்லாமா காரணம் சொல்வார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India australia new vice captain why rohit sharma replaced | Sports News.