3 சவரன் தங்க செயினை காணோம்.. வீடு முழுசும் தேடுன அப்புறம் நாய் கொடுத்த ஷாக்.. அரண்டு போய்ட்டாரு மனுஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் 3 சவரன் தங்க நகையை வீட்டில் இருந்த செல்ல நாய் விழுங்கிய நிலையில் மருத்துவர்களின் உதவியுடன் மீட்டிருக்கிறார் அதன் உரிமையாளர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..
செல்லப் பிராணிகள்
பொதுவாக மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள் மீது ஈர்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இன்று நேற்று அல்ல. பண்டைய காலத்திலேயே மக்கள் வளர்ப்பு பிராணிகளை தங்களது வீட்டில் வளர்த்து வந்ததாக சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக நாய்கள் வளர்ப்பின் மீது மக்களுக்கு எப்போதுமே பெரு விருப்பம் இருந்து வருகிறது. வீட்டில் ஒருவராகவே நாய்களை கருதுவோரும் உண்டு. இந்த சூழ்நிலையில் கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு ஷாக் கொடுத்திருக்கிறது அவர்களுடைய செல்ல நாய்.
Represent Image | mages are subject to © copyright to their respective owners.
கேரள தம்பதி
கேரள மாநிலம் பாலக்காடு, ஓலவக்கோட்டை அத்திமத் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவருடைய மனைவி பேபி. இவர்கள் தங்களுடைய வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதற்கு டெய்சி என் பெயரிட்டிருக்கின்றனர். அண்மையில் பேபி தன்னுடைய படுக்கையறையில் உள்ள கண்ணாடியில் செயினை வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் அந்த செயின் மாயமாக மறைந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்ற நகைகளை பரிசோதித்திருக்கிறார். அவை எல்லாம் பத்திரமாக இருக்கவே, அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து இதுகுறித்து தனது கணவர் கிருஷ்ணதாசிடம் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் வீடு முழுவதும் தேடியிருக்கின்றனர். ஆனாலும் செயின் கிடைக்கவில்லை.
Represent Image | mages are subject to © copyright to their respective owners.
ஷாக் கொடுத்த நாய்
அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த அவர்களுடைய நாய் பென்சிலை கடித்து விழுங்குவதை பார்த்திருக்கிறார் கிருஷ்ணதாஸ். அப்போது தான் ஒருவேளை செயினையும் டெய்சி விழுங்கியிருக்குமோ என சந்தேகம் வந்திருக்கிறது அவருக்கு. இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனது நாயை அழைத்துச் சென்றிருக்கிறார் கிருஷ்ணதாஸ். அப்போது, டெய்சிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதில், டெய்சியின் வயிற்றில் செயின் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், செயின் மீட்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது டெய்சியும் நலமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணதாஸ். அந்த செயினின் மதிப்பு 1.25 லட்ச ரூபாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.