'இப்படியும் நாங்க போட்டோ ஷூட் எடுப்போம்'... 'போட்டோக்களால் நெகிழ வைத்த தம்பதி'... வைரலாகும் கேரள தம்பதியரின் போட்டோஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 13, 2021 03:24 PM

கண் பார்வையற்றவர்களாகக் கேரள தம்பதியர் எடுத்த போட்டோ ஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

Kerala : Love Story of Blind Couple photoshoot goes viral

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் திருமணத்திற்கு முன்பும், திருமணம் செய்து கொண்ட பின்னும் போட்டோ ஷூட் செய்து கொள்வது என்பது தற்போது பரவலாகக் காணப்படுகிறது. அந்த வகையில் சில நேரங்களில் எடுக்கப்படும் போட்டோ ஷூட்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கம்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் கேரள தம்பதியர் எடுத்த போட்டோ ஷூட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இளம்பெண் ஒருவர் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது.

Kerala : Love Story of Blind Couple photoshoot goes viral

இதற்குப் பதிலளித்த அந்த தம்பதியர், ''அது எங்கள் புகைப்படங்கள், அது எங்களின் விருப்பம் சார்ந்தவை, எனவே இவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து என்னுடைய எனர்ஜியை வீணாக்க விரும்பவில்லை'' என தங்களது பதிலை அதிரடியாகத் தெரிவித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்கச் சமீபத்தில் கண்பார்வை இல்லாதவர்கள் போல ஒரு தம்பதியர் எடுத்துக் கொண்ட திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kerala : Love Story of Blind Couple photoshoot goes viral

கேரளாவைச் சேர்ந்த மனு, ஜென்சி என்ற தம்பதியர், save the date என தங்களின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் விதத்தில் எடுத்த அந்த போட்டோ சூட் தான் நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தம்பதியர் இருவரும் கைகோர்த்து சாலையைக் கடப்பது போலவும், லாட்டரி விற்பது போலவும், தலையில் பூ வைத்து விடுவது போலவும் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Kerala : Love Story of Blind Couple photoshoot goes viral

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala : Love Story of Blind Couple photoshoot goes viral | India News.